இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா? - Yarl Voice இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா? - Yarl Voice

இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா?

இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா?
இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா?
குடும்பத்துடன் இந்தியா வந்த கனடா பிரதமர் இந்தியப் பிரதமரால் வரவேற்கப்படாமல் விவசாயத்துறை அமைச்சர் ஒருவரால் வரவேற்கப்பட்டதற்கு பலத்த விமர்சனம் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் UAE இளவரசர் ஆகியோர் இந்தியா வந்தபோது மட்டும் மணிக்கணக்கில் அவர்களுக்காக காத்திருந்த பிரதமர் கனடா பிரதமரை வரவேற்க மட்டும் ஏன் வரவில்லை என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக கனடா பிரதமர் வந்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் அவரை வரவேற்கச் செல்லாததற்கு வேறு சில முரண்பட்டக் கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன.

இந்தியாவில் தனி நாடு கோரும் சீக்கிய பிரிவினைவாதிகள் பலருக்கு கனடா பிரதம் தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளார் என்பதும் அவர்கள் அனைவரும் தற்போது அவருடன் இந்தியா வந்துள்ளார்கள் என்பதும் இதுவே இந்தியப் பிரதமர் கனடா பிரதமரை வரவேற்கச் செல்லாததன் பின்னணியாக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


மேலும் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகமும் பெரிய அளவில் இல்லை.

அதுமட்டுமின்றி 1.4 மில்லியன் இந்தியர்கள் கனடாவில் வசிக்கும் நிலையில் பொறுப்பேற்ற பிறகு இதுவரை கனடா பிரதமர் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் பெரிதும் அலட்டிக்கொள்ளாத கனடா பிரதமர், இந்தியாவில் கால் பதித்ததும் இந்திய முறைப்படி அவரும் அவரது மொத்தக்குடும்பமும் வணக்கம் என கை குவித்து வணங்கியது அற்புதமான காட்சியாக இருந்தது.

அதுமட்டுமின்றி அவரது இளைய மகனான 3 வயது Hadrien, இந்தியப் பயணத்தை வெகுவாக ரசிக்கிறான். அவனுக்கு கொடுக்கப்பட்ட பெரிய பூங்கொத்து ஒன்றை அம்மாவிடம் கொடுக்காமல் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அவன் நடக்க அவன் பெற்றோர் மெதுவாக அவன் பின்னே நடப்பது காண்போர் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

இரு நாட்டுப் பிரதமர்களும் சிவில் அணு ஆயுத ஒத்துழைப்பு, விண்வெளி, பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் கல்வி தொடர்பான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post