அரசியலுக்கு வந்தபின் சினிமாவுக்கு முழுக்கா? கமல் விளக்கம் |
உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இனிமேல் அவர் புதிய சினிமாக்களில் நடிக்க மாட்டார் என்றும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 'இந்தியன் 2' படத்தில் மட்டுமே நடிப்பார் என்றும் கூறப்பட்டது.
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது ஒருபுறம் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், கமல்ஹாசன் இல்லாத திரையுலகை நினைத்து பார்க்கவே முடியாது என்று அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் முழுநேர அரசியலுக்கு வந்த பிறகுதான் படங்களில் தொடர்ந்து நடிப்பதா? இல்லையா? என்பது குறித்து சொல்ல முடியும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment