ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாராஹேன்பிட்ட, அபயராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தினது நிலைப்பாடு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவேண்டியது ஜனாதிபதியின் கையில் உள்ளது. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்கும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் கூறிவருகின்றனர்.
எனவே ஜனாதிபதியின் முடிவினைப் பொறுத்தே ஆட்சியின் நிலைப்பாடு தொடர்பான முடிவுகளை நாம் எடுக்கவிருக்கின்றோம்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்கத் தயாராக இருக்கின்றோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment