“பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த முறைகேடு” - நிர்மலா சீத்தாராமன் |
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த 11 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு மன்மோகன் சிங் தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த தவறு என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு பாஜக ஆட்சி தொடங்குவதற்கு முன்பாகவே இந்த முறைகேடு நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தவறு செய்தவர்கள் மீது பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த மோசடி 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது என்றும், இது இந்தாண்டு ஜனவரி மாதத்தின் 3வது வாரத்தில் கண்டறியப்பட்டது என்றும் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டார்.
11 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியை டாவோசில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டிற்கு பிரதமர் மோடி அழைத்துச் சென்றதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அந்நிகழ்ச்சியில் பங்கேற்க தானாகவே நீரவ் மோடி பதிவு செய்ததாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
Post a Comment