தற்போது நடமுறையில் உள்ள 19 அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பிரதமரைப் பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு பிரதமரைப் பதவி நீக்கும் அதிகாரம் இருந்தது.
இதன்படி 1978ம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியலமைப்பில், கடிதம் ஒன்றை அனுப்பி பிரதமரை பதவி விலக்குவதற்கான அதிகாரம் காணப்பட்டிருந்தது. எனினும் 19வது திருத்த சட்டத்தின் படி அந்த அதிகாரம் இல்லை.
மேலும் அதிகாரம் இருப்பது பிரதமரிடமே. அவரே தனது பதவி விலகல் கடிதத்தை வழங்க வேண்டும். இதுவே பிரதமர் ஒருவரை மாற்றுவதற்கு 19வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையாகும்” அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment