இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி இன்றைய தினம் நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
நுவரெலியாவில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மென்கெப் பாடசாலைக்கு சென்ற எட்வட் தம்பதியினர் அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மென்கெப் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் கிரிஸ்டி ஸ்ரெப்ஸ் மற்றும் அவரது மனைவியின் அழைப்பிற்கமைய இளவரசர் மற்றும் அவரது மனைவி சென்றுள்ளனர்.
பின்னர் அங்குள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளுடன் அவர்கள் இருவரும் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரத்தை செலவிட்டுள்ளனர்.
இலங்கையின் 70வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருத்தினராக பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment