சீனா - வங்கதேச உறவு குறித்து கவலைக் கொள்ளதேவையில்லை- ஹசினா |
சீனா - வங்கதேசம் உறவு குறித்து கவலை கொள்ள வேண்டாம் என வங்கதேச பிரதமர் சேக் ஹசினா கூறியுள்ளார். வங்க தேசத்தின் வளர்ச்சிக்காகவே சீனாவுடனான உறவை மேம்படுத்தி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வங்கதேசத்தின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பெய்ஜிங்கின் ஒத்துழைப்பு கோரி வருகிறோம். அரசாங்கத்தை முன்னேற்றுவதற்காகவும் வங்க தேசத்தின் வளர்ச்சிக்காகவும் எந்த நாட்டுடனுன் ஒத்துழைப்பில் ஈடுபடத் தயாராக இருக்கிறோம்.
ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மக்கள் தொகை மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் வளர்ச்சியடைந்த குறைந்த நாடாக வங்கதேசம் உள்ளது. 2024-ம் ஆண்டிலிருந்து இத்தகைய நிலையிலிருந்து வங்க தேசம் மாறுபட்ட வளர்ச்சி பெறும். இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எங்கள் நாட்டிற்கு வந்து உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்தியாவிற்கு உடனான உறவு எங்கள் நாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் இந்த இரு நாடுகளும் கடலோர மற்றும் எல்லைப் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது.
இதனிடையே வங்கதேசத்திற்கு இந்திய எல்லை உட்பட 6 ரயில் திட்டங்களை உருவாக்க சீன அரசு ஒன்பது பில்லியன் டாலரை குறைந்த வட்டியில் கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்திய சீன எல்லைப் பிரச்சினை இருந்து வரும் சமயத்தில், வங்கதேச-சீன உறவை எண்ணி இந்தியா கவலைக் கொள்ள வேண்டாம்” என ஹசினா தெரிவித்துள்ளார்.
Post a Comment