ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏனையவர்களுடன் பேச மகிந்த ராஜபக்ச தயாராக இல்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் மாத்திரம், பொதுஜன முன்னணியின் நிபந்தனைகளை அவர் ஏற்றுக் கொண்டால், பேச்சுக்களை நடத்த மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கிறார். மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்றும், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டும் என்றும் பொதுஜன முன்னணி கோரி வருகின்றது.
அத்துடன், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் பொதுஜன முன்னணியின் சில உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், பொதுஜன முன்னணியின் எந்தவொரு உறுப்பினருடனும் தாம் பேசத் தயாராக இல்லை என்றும், அதன் கொள்கைகளை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment