இலங்கை-இந்திய கடல் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் நற்கருணை பெருவிழாத் திருப்பலி வழிபாடுகளுடன் திருவிழா இனிதே ஆரம்பமாகும்.
இதனை தொடர்ந்து நாளை யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க ஆண்டகை ஆகியோரினால் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது
இலங்கைக்கு அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சிற்கு செல்லவுள்ளார்.
அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கமையவே அவர் பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைய பிரிகேடியர் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சிற்கு செல்லவுள்ளார். இதற்கு மேலதிகமாக இராணுவ தலைமையத்திற்கும் செல்லவுள்ளார்.
லண்டனில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் பிரியங்கவிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் பிரிகேடியர் இலங்கைக்கு அழைக்கப்பட்ட விடயம் நன்மையான ஒன்று அல்ல என சிரேஷ்ட ராஜதந்திர பேராசிரியர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நேற்றைய தினம் பதவி விலகியுள்ளார். அவரது பதவி காலம் நிறைவடைந்தமையே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.
Post a Comment