தமிழ் சினிமாவில் பிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத் காதலர் தினத்தை முன்னிட்டு ஜூலி என்ற பாடலை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி 14-ஆம் திகதி ஜூலி என்ற சிங்கிள் டிராக்கை வெளியிடப் போவதாக அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அவ்வப்போது அல்பம் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார்.
குறித்த பாடலை ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். சொனி மியூசிக் அந்த பாடலை வெளியிடுகிறது.
அனிருத் ஏற்கனவே ‘எனக்கென யாரும் இல்லையே’, ‘அவளுக்கென்ன’, ‘ஒன்னுமே ஆகல’ உள்ளிட்ட அல்பம் பாடல்களை காதலர் தினத்தன்று வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலர் தினத்தில் ஜூலியுடன் களமிறங்கும் அனிருத்!
Published byKiruththigan
-
0
Post a Comment