எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகளவில் பணத்தை செலவிடுகின்றதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
வாக்கினை பணத்திற்கோ அல்லது பொருளுக்கோ விற்பனை செய்வது அடிமைத்துவத்தின் அடையாளமாகும்.
சில அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் சீமெந்து மூட்டைகள் முதல் பல்வேறு பொருட்களை வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.
எனினும், வாக்காளர்கள் தங்களது வாக்கினை பணத்திற்கு விற்பனை செய்யக் கூடாது. அடிமைத்துவத்திலிருந்து மீண்டு தாம் விரும்பும் அரசியல் கட்சிக்கு தைரியமாக வாக்களிக்க மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.
தேர்தல் பிரச்சார செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டாலும், பிரச்சார செலவுகள் குறைந்தபாடில்லை என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment