வடக்கு- கிழக்கில் பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள சபைகளில் பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கில் பல சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசியப் பேரவையும் ஆட்சியைக் கைப்பற்றுவதில் முனைப்புக்காட்டி வருகின்றதுன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட-கிழக்கில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றியுள்ளபோதும் ஆட்சி அமைகத் தேவையான அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியுள்ளது.
அவ்வாறான சபைகளில் ஆட்சியமைப்பதில் போட்டி ஏற்பட்டால் பெரும்பான்மைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கும் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர் ஒருவரிடம் தமிழ்த் தேசியப் பேரவை ஆட்சியமைத்தால் ஆதரவு கொடுப்பீர்களா? என்று கேட்டபோது ஒரு போதும் இல்லை என்று பதிலளித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க முன்வருவீர்களா? என்றபோது நல்லாட்சி என்ற வகையில் ஆலோசிப்போம். ஆயினும் ஜனாதிபதியின் முடிவுக்கு அமையவே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை யாழ்.மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரிடம் உள்ளுராட்சி சபைகளில் ஆதரவு வழங்குவது தொடர்பில் வினவியபோது,
நாட்டில் இன்றும் நல்லாட்சி அரசாங்கமே தொடர்கிறது. எதிர்காலத்திலும் இந்த நல்லாட்சி அரசு சகல கட்சிகளின் ஆதரவோடு தொடரும். கடந்த மூன்று ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்க் கூட்டமைப்பும் சிறப்பான புரிந்துணர்வோடு செயற்பட்டு வருகின்றன. இதனூடாக தமிழ் மக்கள் பல பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.
எமக்கும் கூட்டமைப்புக்குமிடையே சிறந்த புரிந்துணர்வுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை ஏற்படும் பட்சத்தில் தலைமைத்துவத்தின் முடிவுகளுக்கமைய செயற்படுவோம் என்றார்.
வடக்கு - கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியை கோரும் சபைகளில் ஏனைய கட்சிகளால் நெருக்கடி நிலை தோன்றும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஆதரவு கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பலர் ஒருபோதும் பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கப்போவதில்லை என பகிரங்கமாக தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment