வலி.வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள பொது மக்களின் மேலதிக காணிகள் மிக விரையில் விடுவிக்கப்படும் என்று யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி தெரிவித்தார்.
18 வருடங்களின் பின்னர் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து பருத்தித்துறை – பொன்னாலை வீதி மக்களுடைய பாவனைக்காக திறந்துவிடப்பட்டது. குறித்த வீதியூடான பயணிகள் பேருந்து சேவையினை ஆரம்பித்து வைத்த கட்டளை தளபதி மக்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இராணுவத்தின் வசமுள்ள மக்களுடைய காணிகள் சிறிது சிறிது பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக இன்று (நேற்று) பருத்தித்துறை – பொன்னாலை வீதி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வீதியூடாக பயணிகள் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏனைய வாகனங்களும் செல்ல அனுமதி வழங்கப்படும்.
மேலும் இனங்காணப்பட்ட ஒரு தொகுதிக் காணியும் மிக விரைவில் விடுவிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

Post a Comment