யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் தாயெருவர் தனது குழந்தையுடன் தஞ்சம் புகுந்துள்ளார்.
சாவச்சேரி – கிராம்புவிலைச் சேர்ந்த 35 வயதான குடும்பப் பெண்னே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளார்.
தனது கணவர் தன்னை வாளால் வெட்டியதாகவும், இதனால் தலையில் காயமேற்பட்டுள்ளதாகவும் வைத்திய சாலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனது குழந்தைக்கும் கணவரால் ஆவத்து ஏற்படும் என்றும், தங்களை கணவரிடம் இருந்து பாதுகாக்குமாறும் அவர் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு, குறித்த கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Post a Comment