பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' படத்தின் ஆச்சரியமான ரன்னிங் டைம் |
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பொதுவாக பாலா திரைப்படங்களின் ரன்னிங் டைம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேல்தான் இருக்கும். ஆனால் 'நாச்சியார்' படத்தின் ரன்னிங் டைம் வெறும் 99 நிமிடங்கள் மட்டுமே அதாவது ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் மட்டுமே உள்ளது. இதில் முதல் பாதி 48 நிமிடங்களும், இரண்டாம் பாதி 51 நிமிடங்களும் மட்டுமே இந்த படம் ஓடுகின்றது.
ஆங்கில படங்களுக்கு நிகராக சுமார் ஒன்றரை மணி நேரம் மட்டுமே ரன்னிங் டைம் உள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை நாளைய திரைவிமர்சனத்தில் பார்ப்போம்
Post a Comment