நேற்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிவராத்திரி கொண்டாடப்பட்டது தெரிந்ததே. அந்த வகையில் கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஈஷா யோகா மையத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்த சிறப்பு வழிபாட்டில் தென்னிந்தியாவின் பிரபல நடிகை தமன்னாவும் கலந்து கொண்டார். சத்குருவுடன் இணைந்து வழிபாட்டில் ஈடுபட்ட தமன்னா, நடனமும் ஆடியுள்ளார். இதுகுறித்து நடிகை தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:
இந்த ஆண்டு சிவராத்திரி தினத்தை என்னால் மறக்க முடியாது. நேற்றைய தினம் நடந்தது அனைத்தும் ஒரு மேஜிக்கல் அனுபவம் போல் இருந்தது. இங்குள்ள பணியாளர்கள் அனைவரும் சிறப்புடன் வழிநடத்திச் சென்றனர். இந்த இடத்தில் யாரும் பேசாமல் அமைதியே உருவான இடமாக இருந்தது மனதிற்கு இதமாக உள்ளது. இங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்து வழிபட்டேன். இதற்காக சத்குரு அவர்களுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் தகும் என்று தமன்னா பதிவு செய்துள்ளார்.
Blessed to be in the presence of Sadhguruji , celebrating the very powerful and auspicious Maha Shivratri .Spending time...
Posted by Tamannaah on Tuesday, February 13, 2018
Post a Comment