கை விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஓய்வில் இருந்த தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஏ.பி டி வில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இதன்படி, இந்திய அணியுடனான ஓருநாள் தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் அவர் விளையாடவுள்ளார்.
டுபிளிஸஸ், டி கொக், ஸ்டெயின் ஆகியோர் உபாதையினால் ஓய்வில் உள்ள நிலையில்இ வில்லியர்ஸின் வருகை அணியை வலுப்படுத்தும் என்பதோடு அணிக்கு உத்வேகமும் அளித்துள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ள நிலையில், நான்காவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
இரு அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டி நாளை (சனிக்கிழமை) ஜோகனஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment