பருத்தித்துறை – பொன்னாலை வீதியூடாக பேருந்து சேவை ஆரம்பம் - Yarl Voice பருத்தித்துறை – பொன்னாலை வீதியூடாக பேருந்து சேவை ஆரம்பம் - Yarl Voice

பருத்தித்துறை – பொன்னாலை வீதியூடாக பேருந்து சேவை ஆரம்பம்


படையினரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்த பொன்னாலை – பருத்திதுறை வீதி  விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சேவைகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990 ஆம் அண்டு முதல் மேற்படி வீதி உள்ளிட்ட பல பிரதேசங்கள் இரானுவத்தின் உயர் பாதுகாப்பு வலயங்காக இருந்து வந்திருந்தன. ஆயினும் கடந்த அரசிலும் தற்பொதைய அரசிலும் அங்கு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்களும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.


ஆயினும் அங்குள்ள மக்களுக்கு மிகவும் அவசியமான அந்த வீதி இதுவரை விடுவிக்கப்படாது படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதனால் பல கிலோ மிற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்படி வீதியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றையதினம் குறித்த வீதியை பொது மக்களின் பாவனைக்காக படையினரிடம் இருந்து விடுவிப்பதாக யாழ் வந்த ஐனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்றையதினம் வீதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த வீதி ஊடான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இன்று காலை 8.30 மணிக்கு உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஆரம.ப நிகழ்வு மயிலிட்டியில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர்  என்.வேதநாயகன் யாழ் இராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post