அசேல குணரத்ன இலங்கை அணியிலிருந்து நீக்கம் |
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன நீக்கப்பட்டுள்ளார்.
பயிற்சி ஆட்டத்தின் போது வலது கை பகுதியில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக அவர் குறித்த போட்டித்தொடரிலிருந்து விலக நேரிட்டுள்ளதாகவும் குறித்த உபாதை தொடர்பில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி அசேல குணரத்ன இன்று மாலை நாடு திரும்புவார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அசேல குணரத்னவிற்கு பதிலாக அணியில் இணைக்கப்படும் வீரர் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment