காஸ்மீரில் செயற்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் இரகசியமான முறையில் பணம் கொடுப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்றிலேயே சீதாராமன் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் மிகப்பெரும் விலையைக் கொடுக்க நேரிடும்.
பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலுள்ள அசார் மசூத் தலைமையிலான ஜெய்ஸ் ஈ முகம்மது அஹமட் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து உத்தரவுகள் பிறப்பகிகப்பட்டுள்ளன. எப்பொழுதும் போல் இந்தமுறையும் ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் வழங்கப்படும்.
இதற்கு முன்னரும் பல ஆதாரங்கள் கொடுக்கப்பட்டும் எதுவித நடிவடிக்கைகளும் எடுக்கப்படவல்லை.
மாறாக மும்பைத் தாக்குதல்தாரி, பல்வேறு தாககுதல்களுடன் தொடர்புடையவர்கள் அங்கு சுதந்திரமாக திகழ்கின்றனர்.
பாகிஸ்தானலிருந்து கொண்டு இந்தியாவில் தீவிரவாதிகள் இயக்கப்படுகிறார்கள் என்பதற்கு பல ஆதரங்களை நாம் கையளிப்போம் எனத் தெரிவித்தார்.
இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் எப்போதும் பதற்றத்திற்கும், அச்றுத்தலுக்கும் உள்ளான பகுதியாகவே இருந்து வருகிறது.
அங்கு இந்திய இராணுவ முகாம் மீது, பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு விஜயம் செய்த இந்திய பாதுகாப்பு அமைச்சர், நிர்மலா சீதாரான் நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீதாராமன் மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஆறு இராணுவத்தினர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுக்கு வீர வணக்கங்களும் செலுத்தப்பட்டது.
Post a Comment