பிரபல மத போதகர் பில்லி கிரஹாம் காலமானார் - Yarl Voice பிரபல மத போதகர் பில்லி கிரஹாம் காலமானார் - Yarl Voice

பிரபல மத போதகர் பில்லி கிரஹாம் காலமானார்

பிரபல மத போதகர் பில்லி கிரஹாம் காலமானார்
பிரபல மத போதகர் பில்லி கிரஹாம் காலமானார்
அமெரிக்காவில் புகழ்பெற்ற  கிறிஸ்தவ போதகர் பில்லி கிரஹாம்,   தனது  99ம் வயதில் காலமானார்.  20ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த கிறிஸ்துவ சுவிசேஷகராக  அறியப்பட்ட இவர், நீண்டகால நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அவரது மனைவி ரூத் பெல் கிரஹாம் 2007 ல் இறந்தார்.

பரந்த சிந்தனை கொண்ட சமுதாயத்தை உருவாக்க குறுகிய அடிப்படைவாதத்தை கைவிட்ட கிரஹாமுக்கு  உலகம் முழுவதும் பரந்துப்பட்ட  ஆதரவாளர்கள் இருந்தனர். இவர் ‘அமெரிக்காவின் பாஸ்டர்’  என்றும் அறியப்படுகிறார்.

அமெரிக்காவில் குடிசார் உரிமைகள் இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவர் தனது எழுப்புதல் கூட்டங்களுக்கு வரும் இருவினத்தவருக்கும் ஒரே மாதிரியான நாற்காலிகள் வழங்கப்பட வேண்டும் என கோரினார். 

பல ஆண்டுகளாக இவர் அமெரிக்க மக்களிடையே மதிப்பு வாய்ந்த மனிதராகவும் அமெரிக்க அதிபர்களின் நெருக்கமான ஆலோசகராகவும், இருந்துள்ளார்

ஹாரி ட்ரூமன் முதல்  ஒவ்வொரு அமெரிக்க அதிபருடனும் பிரார்த்தனை செய்துள்ளார். லிண்டன் ஜான்சன், ஜோர்ஜ் புஷ், பில் கிளின்டன் உள்ளிட்ட பல தலைவர்கள் அவருடைய ஆன்மீக ஆலோசனை மீது  ஆர்வமுடையவர்களாக இருந்துள்ளனர்.

பிரிட்டனின் வின்ட்சர் கோட்டையில் உள்ள அரச தேவாலயத்தில், ராணி எலிசபெத் II மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோருக்கு முன்பாக அவர் பிரசங்கித்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக, சுமார் 210 மில்லியன் மக்களுக்கு  தனிப்பட்ட முறையில் அவர் போதித்துள்ளதாக  கூறப்படுகிறது.

தனது சம காலத்தின் பிரதான மதத் தலைவராக அவர் இருந்தார், 
ஜிம் பேக்கர் மற்றும் ஜிம்மி ஸ்வார்கார்ட் போன்ற கிறிஸ்தவ  சமய நற்செய்தியாளர்கள் போல பாலியல் மற்றும் ஊழல் மோசடிகள் என எந்த குற்றச்சாட்டுகளும் இதுவரை இவர்மீது இருந்ததில்லை. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post