திரிபுரா மாநிலத்தின் உயர்வை காண்பதற்கு அத்தொகுதியில் பா.ஜ.க.வின் ஆட்சி அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திரிபுராவின் சோனமுரா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், “திரிபுரா மாநிலம் புதிய உயர்வை தொட விரும்புகிறது. அத்தொகுதி மக்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த தொகுதியின் ஏழை மக்களிடம் கொள்ளை அடித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இளைஞர்களின் வளர்ச்சி அவசியம். அதற்காக கைகொடுக்க வேண்டும். இவை எல்லாம் இத்தொகுதியில் எதிர்பார்க்கப்படும் விடயங்களாக உள்ளபோது பா.ஜ.க.வின் ஆட்சி திரிபுராவிற்கு அவசியம்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் 51தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் தனது கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார்.

Post a Comment