பிரதமர் மோடியிடம் 'நாட்டில் வேலை வாய்ப்புப் பெருகவில்லையே' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் 'சாலையோரத்தில் கடை அமைத்து, பக்கோடா விற்று 200 ரூபாய் சம்பாதிப்பதுகூட முன்னேற்றம்தானே' என்று கூறியிருந்தார்.
பிரதமரின் இப் பதில் பேச்சுக்கு நாட்டில் உள்ள பல்வேறு மாணவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி வருகைதந்தார். அப்போது, பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் சாலைகளில் பக்கோடா விற்றனர்.
பட்டதாரி உடையில், அவர்கள் சாலைகளில் ’மோடி பக்கோடா’, ’அமித்ஷா பக்கோடா’ என்று கூவிக் கூவி பக்கோடா விற்றனர். பாரதிய ஜனதா பொதுக் கூட்டம் நடந்த அரண்மனை மைதானத்தின் அருகேயே, பக்கோடா விற்ற மாணவர்களை போலீசார் கைதுசெய்தனர். கோவா-கர்நாடகத்துக்கிடையே உள்ள மகதாயி நதிநீர்ப் பிரச்னையில் பிரதமர் மோடி தலையிடக் கோரி, கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment