காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சிமேந்து இறக்குவதற்காக வந்த தனியாருக்குச் சொந்தமான கப்பல் ஒன்று பழுதடைந்த நிலையில் மயிலிட்டி துறைமுகப் பகுதிக்கு அருகில் கரையெதுங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக குறித்த கப்பல் கரையெதுங்கிய நிலையில் காணப்படுவதாகவும், அதில் இருந்தவர்களும், பொருட்களும் அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுடைய சிறு படகுகள் மூலம் பாதுகாப்பாக கரையெடுத்துவரப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment