ஊழல் குற்றச்சாட்டில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி எம்.டி. அக்தருசமன் தலைமையிலான சிறப்பு நீதிமன்ற விசாரணை இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்த நிலையில், மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் பிரதமராக பணியாற்றிய காலத்தில் அவருடைய பெயரில் இயங்கிய குழந்தைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட சர்வதேச நன்கொடைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக காலிதா ஸியா மற்றும் அவருடைய மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்கா சிறப்பு நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போதுஇ காலிதாவுக்கு ஐந்து ஆண்டுகளும்இ அவருடைய மகன் மற்றும் உதவியாளர்கள் நால்வருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து காலிதா ஸியாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நிலையில் டாக்காவின் அனைத்து பகுதிகளிலும் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment