பொறுத்திருங்கள் மஹிந்த! |
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொறுத்திருந்து பார்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரியிருப்பதாகவும் கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்குவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை தேவையில்லை. ஜனாதிபதியின் அதிகாரத்தை கொண்டே அவரை பதவி நீக்கலாம்.
புதிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அதற்கு ஒருபோது ஆதரவு வழங்கப் போவதில்லை. சுதந்திர கட்சியை சேர்ந்த ஒருவரே பிரதமராக நியமிக்க வேண்டும்.
இதன்போது மட்டுமே, அரசாங்கத்திற்கு வெளியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment