பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்? |
அக்சயகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பேட்மேன்' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாப்கின் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமுதாய நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் உருவாக காரணமாக இருந்த ரியல் பேட்மேன் தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பது தெரிந்ததே. இந்த படம் குறித்து இவர் கூறியபோது இந்த படத்தை முதலில் ஹாலிவுட்டில் எடுத்து உலகம் முழுவதும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த விரும்பினேன். இருப்பினும் இந்திய அளவில் முதலில் இந்த விஷயத்தை கொண்டு செல்ல பாலிவுட்டில் எடுப்பதற்கு அனுமதித்தேன்' என்று கூறினார்.
மேலும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பிராந்திய மொழிகளிலும் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறிய அருணாச்சலம், தமிழில் இந்த படத்தில் அக்சயகுமார் கேரக்டரில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Post a Comment