தமிழர் வரலாற்று பூமியான வெடுக்குநாறி மலையைப் பாதுகாக்க முதல்வர் ஏற்பாடு -யாழ்.ஊடகவிலயாளர்களின் முயற்சியால் உடனடி பலன்- - Yarl Voice தமிழர் வரலாற்று பூமியான வெடுக்குநாறி மலையைப் பாதுகாக்க முதல்வர் ஏற்பாடு -யாழ்.ஊடகவிலயாளர்களின் முயற்சியால் உடனடி பலன்- - Yarl Voice

தமிழர் வரலாற்று பூமியான வெடுக்குநாறி மலையைப் பாதுகாக்க முதல்வர் ஏற்பாடு -யாழ்.ஊடகவிலயாளர்களின் முயற்சியால் உடனடி பலன்-

வரலாற்றும் பழமை மிக்க வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் வெடுக்குனாறி மாலையை பாதுகாக்க வட மாகாண சபை முடிவெடுத்துள்ளது.

இந்த மாலைக்கு மக்கள் சென்று வருவதற்கான பாதை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதற்கும் வடமாகாண முதலமைச்சர் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து ஆராய்வதற்காக முதலமைச்சர் அமைச்சின் செயலார் மற்றும் அதிகாரிகள் குழு நேற்று வியாழக்கிழமை வெடுக்குனாறி மலைக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் வெடுக்குனாறி மலை அமைந்துள்ளது. இந்;த மலையில் ஆதி சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

வரலாற்று பழமை மிக்க இந்த மலையையும், அங்குள்ள ஆலயத்தையும், ஒலுமடு கிராம மக்கள் குறிப் பாக இளைஞர்கள் பாதுகாத்து புனித தன்மையுடன் பேணி வருகின்றார்கள்.

இந்நிலையில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ள பகுதியை அண்மித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த மலையில் பௌத்த விகாரை அமைக்கவும் முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

தமிழ் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் உள்ள இந்த மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்மையில் இந்தப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்த யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் யாழ்.ஊடக அமையத்தின் ஊடாக வட மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து இந்த மலையையும், அங்குள்ள ஆதிசிவன் ஆலயத்தையும் பாதுகாக்கும் நோக்கில் வீதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்று கொடுக்க முதலமைச்சர் உறுதியளிததார்.

இதன் முதன்கட்ட நடவடிக்கையாக தனது அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை வெடுக்குனாறி மலைக்கு அனுப்பி ஆய்வுகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post