உலகின் மிக உயர்ந்த கட்டிடம் சவுதியில் நிர்மானிப்பு - Yarl Voice உலகின் மிக உயர்ந்த கட்டிடம் சவுதியில் நிர்மானிப்பு - Yarl Voice

உலகின் மிக உயர்ந்த கட்டிடம் சவுதியில் நிர்மானிப்பு

உலகின் மிக உயர்ந்த கட்டிடமான ஜெட்டா டவரின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதன் கட்டுமான பணிகள் 2020 ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்து திறக்கப்படும் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

தற்போது உலகின் மிக உயரமான கட்டிடமாக துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா திகழ்கின்றது. இதன் உயரம் 828 மீட்டர் ஆகும். இந்த பிரம்மாண்ட கட்டிடத்தை மிஞ்சும் அளவிற்கு சவுதி அரேபியாவில் ஜெட்டா கட்டிடத்திற்கான கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

1000 மீட்டர் உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இக்கட்டிடத்திற்கு 14 பில்லியன் டொலர்கள் செலவு செய்யப்படுகின்றது.

170 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் நான்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஏழு டூப்லெக்ஸ் அட்லான்ட் சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுக்கள் 325 குடியிருப்புக்கள் ஆகியவை அடங்கியதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post