சினிமா துறையின் வித்தகன் இனி அரசியலிலும்! |
சினிமாத்துறை வித்தகரான கமல்ஹாசன், அரசியல் களத்துலயும் இறங்கிவிட்டார். அரசியலில் அவருடைய முயற்சி வெற்றியா தோல்வியா காலம்தான் சொல்லும் என்றாலும், அந்த முயற்சிகள் இன்று நேற்று தொடங்கியதாக தெரியவில்லை.
1980களில் இருந்தே கமலின் திரைப்படங்கள் பலவிதமான அரசியல் சாயங்களை சுமந்தேதான் வந்திருக்கு.
சினிமா துறையின் வித்தகன் இனி அரசியலிலும்! |
வறுமையின் நிறம் சிவப்பு
நடிகர் கமல் ஹாசன் சமுதாய பிரச்சனைகளையும் அரசியல் சார்ந்த விஷயங்களையும் தன்னுடைய படங்களில் அதிகளவில் பேசத் தொடங்கியது 80-களுக்கு பிறகுதான். அந்த வகையில் 1980-ம் ஆண்டு வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படம்தான் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை கமல் ஹாசன் தீவிரமாக பேசிய முதல் திரைப்படம் என கூறலாம்.
வேலையில்லா திண்டாட்டத்தை, பூதாகரமான அந்த பிரச்சனையை சுயவேலைவாய்ப்பு மூலம் தீர்க்கமுடியும் எனும் கருத்தை பிரச்சார தொணியில் இல்லாமல் நகைச்சுவையாக பேசியது இத்திரைப்படம்.
சினிமா துறையின் வித்தகன் இனி அரசியலிலும்! |
ஹே ராம்
2000-ம் ஆண்டு கமல் இயக்குனராக அறிமுகமான ஹே ராம் படம் வெளியானது. இந்தியப் பிரிவிணையின் ரத்த வரலாற்றை சாகேத் ராம் எனும் பிராமண தமிழரின் பின்னணியில் இப்படம் காட்சிப்படுத்தியது.
மதர்ச்சார்பற்ற தேசம் எனும் காந்தியின் கொள்கைதான் தன் மனைவியை கொன்றதாக நினைத்து காந்தியை கொல்ல புறப்படுகிறார் சாகேத்ராம். ஆனால் அந்த பயணத்தின் ஊடே இழப்பு என்பது இந்துக்களுக்கு மட்டுமின்றி முஸ்லிம்களுக்கும் நடந்திருக்கிறது என்பதை உணரும் சாகேத் ராம், காந்தியின் அஹிம்சா வழிதான் மக்களை இன்னும் மனிதர்களாக வைத்திருக்கிறது என்பதையும் புரிந்துகொள்கிறார். பின்னர் மனம் திருந்தி காந்தியிடம் மன்னிப்பு கேட்க செல்லும் இடத்தில் காந்தி கோட்சேவால் கொல்லப்படுவதாக படம் நிறைவடைகிறது.
சினிமா துறையின் வித்தகன் இனி அரசியலிலும்! |
நாயகன்
நாயகன் திரைப்படம் பிரபல டானின் மும்பையின் வசித்த வரதராஜ முதலியார் என்பவர்து வாழ்க்கை கதையை தழுவி உருவாக்கப்பட்டது என மணிரத்னம் தன்னுடைய புத்தகம் ஒன்றில் எழுதியிருக்கிறார்.
அரசியலில் ஈடுபட தொடங்கும் நடிகர்கள் பலர் திரைப்படங்களில் அரசியல்வாதியாக, மக்களுக்கு நல்லது செய்வது போன்ற காட்சிகளில் நடிப்பார்கள். கமல்ஹாசனும் அந்த முயற்சியை நாயகன் திரைப்படத்தில் இருந்துதான் துவங்குகிறார். மும்பையில் புறக்கணிக்கப்படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் கமல்ஹாசன் அதற்காக அரசை எதிர்க்கும் டானாகவே மாறுகிறார்.
சினிமா துறையின் வித்தகன் இனி அரசியலிலும்! |
உன்னால் முடியும் தம்பி
80களின் இறுதியில் கமல் ஹாசன், சமூக அவலங்களின் மீதான தன் கோபத்தை தீவிரமாக தன்னுடைய படங்களின் மூலமாக வெளிப்படுத்த தொடங்கினார். அந்த வகையில் 1988-ம் ஆண்டு அவருடைய நடிப்பில் வெளிவந்த படத்தில் சீர்க்குழைந்துப் போன அரசாங்க அமைப்பை கேள்வி எழுப்பும் விதமாக வெளியாகி இருந்தது இந்த படம்.
சங்கீத குடும்பத்தில் பிறந்து சங்கீதத்தை விட சமூக சீக்குகளை களைவதே முக்கியம் எனும் உறுதியான மனப்பான்மை கொண்ட உதயமூர்த்தி எனும் கதாபாத்திரத்தில் இப்படத்தில் கமல் நடித்திருப்பார். இத்திரைப்படம் சமூக அவலங்களை பார்த்து கோபப்படும் ஒரு சாமான்யனின் பார்வையில் உருவாகி இருக்கும்.
சினிமா துறையின் வித்தகன் இனி அரசியலிலும்! |
தேவர் மகன்
கமலின் திரை வாழ்க்கையில் மிகவும் சர்ச்சைக்குள்ளான படங்களுள் ஒன்று தேவர் மகன். சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.
படம் முழுவதும் பேசப்பட்ட ஜாதி பெருமை வசனங்களும், போற்றிப் பாடடி பெண்ணே பாடலும் இன்று வரை தென் தமிழகத்தில் ஜாதி திருவிழாக்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜாதி பெயர்களை மக்கள் நேரடியாக பயன்படுத்த தயங்கிய காலத்தில் தனது தலைப்பிலேயே ஜாதி பெயரை தாங்கி வெளிவந்த திரைப்படம் தேவர் மகன். படம் முழுக்க ஜாதி பெருமை பேசிவிட்டு கிளைமேக்ஸில் “போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா” என்ற வசனத்தை வைத்துவிட்டால் மட்டும் அது முற்போக்கு படமாகி விடாது என்பது முற்போக்காளர்களின் கருத்து.
சினிமா துறையின் வித்தகன் இனி அரசியலிலும்! |
சினிமா துறையின் வித்தகன் இனி அரசியலிலும்! |
Post a Comment