மாயாவாக சுஜா வருணி! |
‘கிடாரி’, ‘குற்றம் 23’ படத்தை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் நடிகை சுஜா வருணி.
ஒரு இரவில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டதுதான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. மாயா என்கிற திரில்லர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் சுஜா வருணி.
காமெடி, பாடல்கள் போன்றவற்றிற்கு அதிகம் முக்கியதுவம் கொடுக்காமல், கிரைம் திரில்லர் கதையாக இயக்குநர் மாறன் உருவாக்கியுள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் அருள்நிதியின் நடிப்பு இந்தப் படத்திலும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது
ஒளிப்பதிவாளராக அர்விந்த் சிங், இசையமைப்பாளர் ஷாம் சி.எஸ். இருவரது பங்கும் உள்ளது. மஹிமா, வித்யா பிரதீப், சாயா சிங் உள்ளிட்டவர்களின் ஒவ்வொருவரது பங்களிப்பும் இப்படத்தில் தனித்து தெரியும் என்று கூறுகின்றனர் படக்குழுவினர். அடுத்தடுத்து சுஜா வருணியின் அடுத்த வெளிவரவுகளாக உள்ள ‘சத்ரு’, ‘ஆண் தேவதை’ ஆகிய படங்களின் வெளியீடும் விரைவில் இருக்கிறது’’ என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment