யாழ்.காரைநகர் பகுதியில் வாக்களிக்கச் சென்ற மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சிக்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் சற்று முன்னர் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
காரை நகர் பகுதியில் இன்று வாக்களிக்கச் சென்ற மக்களிடம் ஜக்கிய தேசிய கட்சியினர் தமது தேர்தல் பிரச்சாரத்தை செய்ததுடன், தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தனர்.
இதன் போது அவ்வழியாக வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் ஜக்கிய தேசிய கட்சியினருடன் முரண்பட்டுக் கொண்டுள்ளார்.
இதன் பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜ.தே.க கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தேர்தல்கள் கண்காணிப்பு குழுவாக பவ்ரல் அமைப்பிடம் பாராளுமன்ற உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார்.

Post a Comment