ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகதபால நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது தகவல்களை மறைத்தார் அல்லது அழித்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளால் லசந்த படுகொலை செய்யப்பட்ட என்ற பொய்யான தகவல்களை வழங்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட 48 மணித்தியாலங்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதிகாரி, நேற்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் மற்றும், ஏனைய சிலரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தென்னிலங்கையில் நடைபெற்ற பல்வேறு அரசியல் கொலைக்கு விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் லசந்த தொடர்பில் வெளியான தகவல்கள் காரணமாக, பொலிஸாரின் போலி நடவடிக்கைககள் அம்பலமாகி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் திட்டமிட்டு விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment