யாழ்.ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் ஈ.பி.டி.பி வேட்பாளரை தாக்கிய குற்றச்சாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் பொலிஸாரினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 7 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை தேடி ஊர்காவற்றுறை பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று நண்பகல் நடைபெற்றுள்ளது. குறித்த பகுதியில் வாக்களிக்க சென்ற மக்களிடம் ஈ.பி.டி.பி வேட்பாள் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் நின்ற பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதை அவதானித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் ஈ.பி.டி.பியினரை அங்கிருந்து கலைந்து சென்று செல்லுமாறு கோரியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த ஈ.பி.டி.பி வேட்பாளர் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து ஊர்காவற்றுறை பிரதேச வைத்திய சாலையில் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளரை கைது செய்துள்ளனர். மேலும் 7 பேரையும் பொலிஸார் கைது செய்வதற்காக தேடி வருகின்றனர்.

Post a Comment