நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை தொடர்பில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேலே அவர் மேற்படி கருத்தினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நான் கொழும்பு சென்று வந்து வவுனியாவில் இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் தேர்தல் முடிவுகள் பற்றிய முழு அறிவையும் இன்னமும் பெறவில்லை. இத்தேர்தல் முடிவானது பொதுவாகக் கூறுவதானால் வட கிழக்கு மாகாணங்களில் பல கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்து சென்றுள்ளமையையும் ஒரு சில மன்றங்களைத் தவிர எந்த ஒரு கட்சியும் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மையை பெறமுடியாமல் இருப்பதையும் உணர்த்தி நிற்கின்றது.
அதேவேளை, தமிழ் மக்கள் பொதுவாகத் தமது தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தி உற்றிருக்கின்றார்கள் என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. மாற்றம் ஒன்றை மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால்தான் சில கட்சிகளுக்கு வீழ்ச்சியும் சில கட்சிகளுக்கு எழுச்சியும் ஏற்பட்டிருக்கின்றது.
காலாதிகாலமாக “வீடு” சின்னத்திற்கு வாக்களித்த பலர் தற்போதைய தலைமைத்துவத்தைப் பிடிக்காததாலோ என்னவோ அவர்கள் இம் முறை யாழ் மாவட்டத் தேர்தலில் ஈடுபடவில்லை என்று தெரிகின்றது.
உதாரணமாக இத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் கிளிநொச்சியில் 74.82மூ, முல்லைத்தீவில் 77.49மூ, மன்னாரில் 81.38மூ, வவுனியாவில் 74.03மூ ஆக இருக்க யாழ் மாவட்டத்தில் 70.84மூ விகிதத்தினரே வாக்களித்துள்ளார்கள்.
சில புள்ளி விபரங்கள் இன்னும் குறைத்தே யாழ் வாக்களிப்பைக் குறிப்பிடுகின்றன. அரசாங்க புள்ளி விபரங்களின் படி தமிழரசுக்கட்சி 2015ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குத் தொகை 515963. இம் முறை அத்தொகை 339675 ஆக குறைந்துள்ளது. 34மூ சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
எமது உரிமைகளை, உரித்துக்களை தொடர்ச்சியாக ஆணித்தரமாக எமது புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளையும் முன்வைத்து அரசாங்கத்திடம் நீதியானவற்றை, நியாயமானவற்றைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டிருந்தால் தெற்கில் யார் வந்தாலும் எம்மவர் பயப்படத்தேவையிருந்திருக்காது.
சுயநலன் தரக்கூடிய வெளிநாட்டு உள்ளீடல்களால் மக்களுடன் கலந்தாலோசியாது பலவிட்டுக் கொடுப்புக்களை இன்றைய ஆட்சிக்காக எமது தலைமைகள் ஏற்படுத்திக் கொடுத்தமை தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் எம்மை மேலும் பலவீனப்படுத்தி இருக்கின்றதோ என்று சிந்திக்க வைக்கின்றது.
ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காரணமாக வடமாகாண சபையின் நிர்வாகங்களைச் சரியானமுறையில் செய்யவிடாமல் தமிழரசுக்கட்சியின் ஒரு பகுதியினர் பல இடையூறுகளை ஏற்படுத்தி இருந்தனர்.
மேலும் எம் மக்களையும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் அந்நியப்படுத்தி இருட்டறையில் தள்ளிவிட்டு தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப எமது தீர்வு விடயத்தை ஒரு சிலரே தனியாகக் கையாண்டார்கள். முதலமைச்சரான எனக்கே என்ன நடைபெறுகிறது என்று தெரியாத நிலையில் மக்களின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று பல சமயங்களில் நான் எண்ணிப்பார்த்ததுண்டு.
இவை யாவும் வெளிப்படைத் தன்மையற்ற நடபடிமு
றைமையின் பிரதிபலிப்புக்களே. ஆகவே இந்த உள்ளுராட்சித் தேர்தல் தமிழரசுக்கட்சியையும் அதன் தலைமைகளையும் தம்மைத்தாமே கேள்வி கேட்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது என்று கூறலாம். அசைக்கமுடியாது என்றிருந்தவர்கள் நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளார்கள்!
இனியாவது ஓரிருவர் முடிவுகளை எடுக்கும் நிலை மாற்றப்பட்டு சகலரையும் பங்குதாரர்களாக உள்வாங்கி ஆக்கபூர்வமான தீர்க்கதரிசனம் மிக்க செயற்பாடுகளை கட்சிவேறுபாடுகள் கடந்து முன்னெடுத்து எமது மக்களுக்கான பணியை ஆற்ற நாம் யாவரும் ஒன்று கூட வேண்டும்.
அதேவேளை உள்@ராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்க் கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஒன்றிணையவேண்டும். இந்தத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக நான் செயற்படவில்லை.
அதனால் நீங்கள் இப்படித்தான் செய்யவேண்டும் என்று எந்த ஆலோசனையையும் எந்த கட்சிக்கும் நான் கூறவிரும்பவில்லை. ஆனால் கொள்கையில் நாம் யாவரும் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கொள்கையில் எம்மவர் ஒன்றிணைவார்களா? சுயநலம் மேலோங்கும் போது கொள்கைகள் மீதான பற்று குறைந்துவரும்.
அடுத்து நான் அறிந்த வரையில் நாட்டிலும் தமிழ் மக்கள் சம்பந்தமாகவும் மேலெழுந்த வாரியாக மூன்று விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று சிங்கள மக்களின் காவலனாய் மஹிந்த இராஜபக்ச இன்னமும் அடையாளப்படுத்தப்படுகின்றார் என்பது.
இதை இனவாதத்தின் பிரதிபலிப்பாக நான் பார்க்கவில்லை. பல காரணங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து அவரை முன்னிலைப்படுத்தியுள்ளது. இரண்டு நல்லாட்சி அரசாங்கம் தமிழர்களைப் பொறுத்த வரையில் நன்றி மறந்து, நாட்டைப் பொறுத்தவரையில் நல்லாட்சியிலும், மக்களின் பொருளாதார முன்னேற்றத்திலும் கரிசனை காட்டாது இதுவரையில் நடந்து வந்துள்ள நடைமுறை.
அத்துடன் ஊழலைக் கட்டுப்படுத்தத் தீர்க்கமான முடிவுகளை எடுக்காமையும் ஒரு காரணம். மூன்று தமிழ் மக்களுக்கு ஒரு முகம் அரசாங்கத்திற்கு ,ன்னொரு முகம் காட்டிய தமிழ்த் தலைவர்கள் இன்று சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இவற்றை ஒவ்வொன்றாக நான் பரிசீலனைக்கு எடுக்கின்றேன் என்றார்.
Post a Comment