தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால் எவ்வாறு நிராகரிக்கப்பட்டு – தூக்கி எறியப்பட்டாரோ, அதேபோன்றுதான் சுரேஸ் பிரேமசந்திரனுக்கும் நடக்கும். மக்கள் எப்போதும் ஒற்றுமையான பலமான அணியைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படிப்பட்ட அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
வலி.மேற்கு பிரதேச சபையில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஆதரித்து வலி.மேற்கில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விடயங்களை எடுத்துக் கொண்டுள்ளது. அவற்றில் சமாந்தரப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றது. அரசியல் தீர்வு மற்றையது அபிவிருத்தி.
தமிழ் இனம் அடிமைப்பட்ட இனமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அந்த அடிமை விலங்கை உடைத்தெறிவதற்காகவே எங்களின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடினார். எமது போராட்டம் பல நாடுகளின் சகுனித்தனத்தால் துரதிஷ்டவசமாக அழிக்கப்பட்டு விட்டது.
ஆயுதம் ஏந்தா அறவழியில் போராடினோம். பின்னர் ஆயுதம் ஏந்திப் போராடினோம். இரண்டு முடிவுக்கு வந்த நிலையில் இப்போது இராஜதந்திர ரீதியில் போராடுகின்றோம். எமது இராஜதந்திரப் போராட்டத்தை பலரும் பல விதமாக விமர்சிக்கலாம். ஆனால் எமது பாதை சரியானது. இந்தப் பாதையில் நாம் ஒற்றுமையாகப் பயணிக்கவேண்டும்.
கூட்டமைப்பு இலக்கை அடைவதற்காக ஒற்றுமையாகப் பயணிக்கின்றது. ஆனால், சிலர் எம்மிடமிருந்து பிரிந்து செல்கின்றார்கள். அவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment