சமஸ்கிருதத்தை விட பழமையானது, அழகானது தமிழ் மொழி- மோடி புகழாரம் |
சமஸ்கிருதத்தை விட பழமையான மொழியான தமிழ் மொழி தனக்கு தெரியாமல் இருப்பது வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் திரையிடப்பட்டது.
அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடிய, பிரதமர் மோடி இந்தி மொழியிலேயே பேசினார். தன்னால் பிற மொழி பேச முடியாததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.
மேலும், தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையான, அழகான மொழி என்று பிரதமர் மோடி புகழ்ந்தார். ஆனால் தன்னால் தமிழ் மொழியில் வணக்கத்தை தவிர வேறு எதுவும் பேச தெரியாது என்பது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment