உள்ளுராட்சி தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 இலட்சத்தி 68 ஆயிரத்து 476 பேர் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலகருமான என்.வேதநாயகன் தெரிவித்தார்.
521 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் 243 வாக்கென்னும் நிலையங்களின் ஊடாக விரைவாக எண்ணப்பட்டு, இரவு 8 மணியளவில் சகல தேர்தல் இறுதி முடிவுகளும் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் வாக்களிக்க இம்முறை 4 இலட்சத்தி 68 ஆயிரத்து 476 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வட்டாரங்களின் அடிப்படையில் 243 வாக்கென்னும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் வாக்களிக்க முடியும். வாக்களிக்கச் செல்லும் போது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டுக்களை கொண்டு செல்ல வேண்டும். தற்காலிக அடையாள அட்டையினை பெற்றவர்கள், அதனை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். சில பதிவு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைகள் காரணமாக ஒருவருக்கு இரண்டு வாக்குச் சீட்டுக்கள் வந்து சேர்த்திருக்கும். இருப்பினும் ஒரு தடவை மட்டுமே அவர்கள் வாக்களிக் முடியும்.
கடந்த தேர்தலைப் போல் இல்லாது இம்முறை வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்று முடிந்த பின்னர் அங்கு வைத்தே வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒரு வாட்டாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் இருந்தால், அதில் ஒரு வாக்களிப்பு நிலையத்தினை தெரிவு செய்து அங்கு வைத்து, தனித்தனியாக வாக்குகள் எண்ணப்படும்.
தபால் மூல வாக்குகளை அந்தந் வட்டாரங்களின் வாக்கென்றும் நிலையங்களுக்கு உரியதோ அதனை பிரிவத்து, அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஒரு வாக்கென்னும் நிலையத்திற்கு சேர வேண்டிய தபால் மூல வாக்குகள் 50 ற்கும் மேற்பட்டதாக இருப்பின், அவ் வாக்கென்னும் நிலையத்தில் தனியாக ஒரு அறையில் வைத்து தபால் மூல வாக்குகள் எண்ணப்படும்.
50 ற்கும் குறைந்த தபால் மூல வாக்குகள் இருப்பின் அவை சாதாரண வாக்குகளுடன் சேர்த்து, அந்தந்த வட்டார வாக்கென்னும் நிலையத்தில் வைத்து எண்ணப்படும்.
ஒவ்வொரு வட்டாரங்களின் வாக்களிப்பின் முடிவுகள் அந்த வட்டாரத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலகரினால் அறிவிக்கப்படும்.
அதன் படி எமது மாவட்டத்தில் உள்ள யாழ்.மாநகர சபை உட்பட, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபை சபைகளுக்கான அதாவது 17 உள்ளுராட்சி மன்றங்களுக்கான முடிவுகளும் தனித்தனியாக வெளியிடப்படும்.
அனேகமாக இரவு 8 மணியளவில் யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகளை பெறக்கூயதாக இருக்கும் என்று எதிர்;பார்க்கின்றோம் என்றார்.