கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் மிதித்த கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் பிரமுகர்! |
கேரளாவில் உள்ள கோலிக்கோடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் எட்டி மிதித்ததால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோலிக்கோட்டை சேர்ந்த 28 வயது பெண் ஜோஸ்னா ஷிபி, இவர் 4 மாத கர்ப்பிணி ஆவார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் இவருடைய கணவருக்கும் அருகில் வசிப்போரான சரசமா மற்றும் சைதல்வி ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது.
நிலத்தகராறு தொடர்பாக ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சரசமா மற்றும் சைதல்வி ஆகியோரை எச்சரித்துச் சென்றனர் என்றும் கூறப்படுகிறது.
சரசமா மற்றும் சைதல்வி ஆகியோர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் ஜோஸ்னா ஷிபியுடனான நிலத்தகராறு தொடர்பாக உள்ளூர் கட்சிக் காரர்கள் சிலரை உதவிக்கு அழைத்துள்ளனர் இவர்கள்.
அங்குவந்த வெலன்கோடு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தம்பி, ஜோய், ரஞ்சித், பினோய் ஆகியோர் சரசமா மற்றும் சைதல்வி ஆகியோர் ஜோஸ்னா ஷிபி மற்றும் அவரின் கணவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
அப்போது உள்ளூர் மார்க்ஸிஸ்ட் கட்சிச் செயலாளரான தம்பி, கர்ப்பிணி என்றும் பாராமல் ஜோஸ்னா ஷிபியின் வயிற்றில் காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதன் காரணமாக ஜோஸ்னா ஷிபிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் வேறு வழியில்லாமல் கருவை கட்டாயமாக கலைக்க வேண்டிய பரிதாப நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார்.
இது தொடர்பாக கொடஞ்சேரி காவல்நிலையத்தில் ஜோஸ்னா ஷிபி புகார் அளித்ததன் பேரில், அவரை தாக்கிய மாரிக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் கொல்லம் நகரில் காரில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை மதுபோதையில் இருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியினர் சிலர் வெளியே இழுத்து அவரை வயிற்றில் எட்டி மிதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment