-தென்னிலங்கை சவாலுக்கு முகம் கொடுக்க- தமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றிணைவது கட்டாயம் -சுமந்திரன்- - Yarl Voice -தென்னிலங்கை சவாலுக்கு முகம் கொடுக்க- தமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றிணைவது கட்டாயம் -சுமந்திரன்- - Yarl Voice

-தென்னிலங்கை சவாலுக்கு முகம் கொடுக்க- தமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றிணைவது கட்டாயம் -சுமந்திரன்-

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்க பேரிடியாக தென்னிலங்கையில் இருந்து எழும் பாரிய வசாலுக்கு முகம் கொடுக்க தமிழ் தேசிய கொள்கையின்பால் ஒன்றாக நிற்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியல் பணிக்க கைகோர்க்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் நேற்று மாலைநடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவக்கையில்:-

நேற்று (நேற்று முன்னதினம்) நடைபெற்று முடிந்த உள்ளுராடச்p மன்றங்களுக்கான தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

தெற்கிலே ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். புதிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில்தான் இந்த தேர்தல்கள் இடம்பெற்றன.

இந்த தேர்தலின் போது சில தமிழ் கட்கிகள் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக தமிழ் மக்கள் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். நாங்கள் அதனை மறுத்துரைத்தோம்.
வந்த முடிவுகளின் பிரகாரம் இடைக்கால அறிக்கையினை நிராகரிக்கின்ற தீர்மானத்தை எடுத்து மக்கள் வாக்களிக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.

யாழ்ப்பாணத்திலே ஏற்பட்ட சிறிய பின்னடைவு கூட அதனால் ஏற்பட்டதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. விசேடமாக தமிழர் தாயகப் பகுதிகளிலே போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும் கூடுதலான வாக்களை நாங்கள் எடுத்துள்ளோம்.

தெற்கிலே மஹிந்த ராஜபக்ச நடத்திய பிரச்சாரத்தில் புதிய அரசியல் உருவாக்கத்தை முதன்மைப் படுத்தி சிங்கள மக்களிடத்தில் முறைப்பாட்டை வைத்திருந்தார். அதாவது இடைக்கால அறிக்கையில் செல்லப்பட்டது போன்று புதிய அரசியல் அமைப்பு உருவாகுமாகா இருந்தால், அது சமஸ்ரியயை மீறிய நாட்டை இரண்டாக பிளக்கும் அரசியல் அமைப்பு சட்டமா இருக்கும் என்று அவர் சிங்கள மக்களிடம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்த வகையில் பார்ககு;ம் போது சிங்கள மக்கள் தென்னிலங்கையில், அரசாங்த்தை நிராகரித்து, மஹிந்த ராஜபச்சவை மீண்டும் வாக்களித்திருப்பதற்கான காரணம், அதுதான் என்று சொல்ல முடியாது. ஊழல், நிர்வாக முறைகோடு போன்ற காரணங்களும் இருக்கலாம். ஆனால் மஹிந்த ராஜபச்சவின் தொடர்ச்சியான எச்சரிக்கையும் அதற்கு பிரதான காரணமாக அமைந்திருக்கலாம்.

அந்த கோணத்தில் பார்ககு;ம் போது, புதிய அரசியல் அமைப்புக்கான முயட்சி ஒரு பாரிய பின்னடைவை சந்தித்திருக்கலாம் என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.
நாம் இடைக்கால அறிக்கையில் உள்ள சொற்களை பிரித்து, அதனை ஆராய்ந்து விவாதித்துக் கொண்டிருக்கையில், அதே சொற்கள், அதே இடைக்கால அறிக்கை நாட்டை இரண்டாக பிரிக்க போகின்றது என்ற அச்சத்தை சிங்கள மக்கள் வெளிப்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாக்களிப்பபாக இதனை பிரயோகித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.

இந்த நிலையில் நாங்கள் தமிழ் மக்களாக எப்படியாக சவால்களுக்க முகம் கொடுக்க போகின்றோம். அரசியல் அமைப்பு பணிகள் இவ்வளவு தூரம் வந்து கைவிடப்படுமாக இருந்தால், என்ன விதமாக மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்கிற வழியில் நாங்கள் செயற்பட போகிறோம் என்பதை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நாங்கள் சேர்ந்து ஆராய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் விசேடமான ஒரு கோரிக்கையை நான் ஏனை தமிழ் கட்கிகளுக்க விடுக்க விரும்புகின்றோன். ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டு புதிய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கம் சம்மந்தமாக சற்று முன்னேறியிருக்கின்றோம். தெற்கிலே ஏற்பட்டிருக்கின்ற மாற்றம அரசியல் அமைப்பினை நிறுத்தப்படக்கூடிய சாத்தியக் கூறு தென்படும் சவாலான நிலையை தோற்றுவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த கொள்கையின்பால் ஒன்றாக நிற்கின்ற கட்சிகள் இந்த வேளையில் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்யடி ஒரு தேவை மக்கள் சார்பாக எழுந்துள்ளது. குறிப்பாக சொல்வதாக இருந்தால் சமஸ்ரி தீர்வுக்கு குறைவாக ஒரு தீர்வும் இருக்க முடியாது. குறைந்தது சமஸ்ரி தீர்வினையாவது எமது மக்களுக்க பெற்றுத்தர வேண்டும் என்பதில் குறியாக நிற்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து தென்னிலங்கையில் இருந்து எழுந்துள்ள பாரிய சவாலுக்கு முகம் கொடுக்க வேண்யடி தருனம் இது.

ஆகையால் கடந்த ஓரிரு வருடங்களாக சொற்கயினுடைய வியாக்கியானங்கள் மீதும், வேறு பல சிறிய சிறிய காரணங்களினாலும், பிரிந்திருந்த தமிழ் கட்சிகள் கொள்கை அளவில் ஒரு நாட்டுக்கள்ளே, ஆனால் சமஸ்ரி அடிப்படையில் தீர்வை வலியுறுத்தும் கட்சிகள் இந்த வேளை ஒன்றாக சேர்ந்து பயணிப்பதுதான் தமிழ் மக்களுக்கு அத்தியாவசியமாகவும், அவசியமாகவும் தேவைப்படும் விடயம் என்றார்.


இந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டிருந்தது. இவற்றில் 58 சபைகளில் போட்டியிட வேட்புமனுக்களை செலுத்தியிருந்தோம். அதில் 2 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதன்படி 56 சபைகளில் நாங்கள் போட்டியிட்டிருந்தோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post