அமெரிக்காவில் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில், ரஷ்யா தலையிட முயற்சிக்குமென, அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் குழுக் கூட்டத்தின்போது, அமெரிக்கத் தேசிய புலனாய்ப் பிரிவின் பணிப்பாளர் டான் கோட்ஸ் (Dan Coats)) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டமைபோன்று, நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு காணப்படுமென்று நாம் கருதுகின்றோம்.
இந்நிலையில், இடைக்காலத் தேர்தலை முன்னிட்டுஇ சமூக ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரங்களை முன்னெடுக்க ரஷ்யா முயற்சிக்குமென்பதுடன், தவறான அறிக்கைகளைப் பரப்புவதற்கும் ரஷ்யா முயற்சிக்கும்’ என்றார்.
மேலும், ‘இடைக்காலத் தேர்தலில் ரஷ்யா தலையிட முயற்சிப்பது தொடர்பாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, நாம் அவதானமாகச் செயற்பட வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment