நடிகை வித்யா பாலன் பட ரீமேக்கில் களமிறங்கும் ஜோதிகா!! |
நடிகை ஜோதிகா 36 வயதினிலே, மகளீர் மட்டும் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து, தற்போது வெளியான நாச்சியார் திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமைந்தது.
இதையடுத்து, ஹிந்தி நடிகை வித்யா பாலனின் படமான "தும்ஹாரி சுலு" ரீமேக்கில் ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ஜோதிகாவின் மொழி பட இயக்குனரான ராதா மோகன் இயக்க உள்ளதாக கூறுகின்றனர்.
நடிகை வித்யா பாலனின் நடிப்பில் வெளியான படம் "தும்ஹாரி சுலு"-வின் கதைக்களம் திருமணமான ஒருபெண் வானொலியில் ஆர்.ஜே-வாக வேலை கிடைத்ததும் எவ்வாறு அவர்களின் வாழ்க்கை மாறுகிறது என்பாத்து பற்றிய திரைப்படம். இந்த கதைகளத்தில் ஜோதிகா நடிப்பதற்கு உடனே ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர்.
Post a Comment