யாழில் அறிதிப் பெரும்பான்மை இழந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு |
ஒவ்வொரு கட்சியும் 3 இல் 2 பெரும்பான்மையினை பெற்றுக் கொள்ள தவறியுள்ள நிலையில் அந்தந்த மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு பிறிதொரு கட்சியின் ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், வாக்கென்னும் பணிகள் நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு வட்டாராத்திலும் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்ற இவ்வாக்கென்னும் நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று இரவு 9 மணியளவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.
பெரும்பாலான வட்டாரங்களிலும் பலத்த போட்டிகளை எதிர் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் 10 தொடக்கம் 40 வரையான வாக்கு வித்தியாசங்களில், வெற்றி அல்லது தேல்வினை தமதாக்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment