பாதுகாப்பு படைகளுக்கு நவீன ஆயுதங்களை 15,935கோடி ரூபாவிற்கு கொள்வனவு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இக்கொள்வனவின் போது நவீனஇயந்திர துப்பாக்கிகள், சிலீப்பர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிலீப்பர் தூப்பாக்கிகள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வாங்கப்படவுள்ளதாகவும், ஏனையவை இந்தியாவில் வைத்து தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment