எத்தியோப்பியாவில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு |
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் நெருக்கடிகள் காரணமாக பிரதமர் ஹைலிமரியாம் தேசாலென் பதவி விலகிய நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பிய பிரதமராக ஹைலிமரியாம் தேசாலென் கடந்த 2012 ல் தேர்வு செய்யப்பட்டார். நாட்டின் வளர்ச்சி சரியான விகிதத்தில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டங்கள் இடம்பெற்று வந்தன.
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், போராட்டம் செய்தவர்களில் சுமார் 800 கொல்லப்பட்டனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் விசாரணை செய்யப்படாமலேயே சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி பல்வேறு அரசியல் குழப்பங்கள் அங்கு நிலவி வந்தன.
அதை தொடர்ந்து எத்தியோப்பிய பிரதமர் ஹைலிமரியம் தேசாலென் நேற்று முந்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் எத்தியோப்பியாவில் நிலவிவந்த குழப்பங்களுக்கு தீர்வுகாண பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தார். ஆனால் அவருடைய முயற்சிகள் தோல்வி அடைந்ததனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எத்தியோப்பியாவில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு |
புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருப்பார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் நெருக்கடிகள் காரணமாக சமீபத்தில் மாலத்தீவில் அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்ட நிலையில் தற்போது எத்தியோப்பியாவிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment