நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று தற்போது அலரி மாளிகையில் நடைபெற்று வருகின்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகவேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு, கட்சித் தலைமை பொறுப்பிலிருந்தும் பிரதமர் ரணில் விலகவேண்டுமென கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கோரி வருகின்றனர்.
இந்நிலையில், கட்சி உறுப்பினர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் ரணில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்திப்பைத் தொடர்ந்து முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கும் ஏற்பாடாகியுள்ளது.
ரணில் தலமையில் அலரிமாளிகையில் அவசர சந்திப்பு!
Published byKiruththigan
-
0
Post a Comment