யாழில் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் தங்கியுள்ளவர்கள் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலகருமான என்.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் மற்றும் நலன்புரி நிலயங்களின் தங்கியுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியான வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீற்குடியேற்றம் செய்யப்படவில்லை. இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் நலன்புரி நிலையங்களில் உள்ளார்கள்.
அவர்கள் வாக்களிக்க செல்வதற்கான போக்குவரத்து சேவைகள் இலவசமாக செய்து கொடுக்கப்படும்.
மேலும் வழமையான போக்குவரத்து சேவைகயில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தனியார் சிற்றூர்திகள் என்பனவும், அந்தந்த போக்குவரத்து வீதிகளில் தூரமாக உள்ள வாக்களிப்பு நிலையங்கள் வரைக்கும் தமது சேவைகளை நீடிப்பதாக அறிவித்துள்ளனர் என்றார்.

Post a Comment