கனட அதிபரின் மனைவி, பயங்கரவாதியுடன் புகைப்படம் எடுத்ததால் சர்ச்சை |
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். இவர் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதை தொடர்ந்து மும்பையில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வொன்றில், கனடா பிரதமரின் மனைவி சோஃபி, அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த பயங்கரவாதி ஜஸ்பாலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
சீக்கியர்களுக்கான தனிநாடு அல்லது காலிஸ்தான் கோரும் பிரிவினைவாத அமைப்பும், கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட சீக்கிய பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஜஸ்பால் அத்வல்.
1987ல் இவர் உட்பட நான்கு பேர் பஞ்சாப் அமைச்சர் மல்கிரத் சிங் சித்துவை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்றனர்.
கனட அதிபரின் மனைவி, பயங்கரவாதியுடன் புகைப்படம் எடுத்ததால் சர்ச்சை |
இந்நிலையில் மும்பையில் கனடா பிரதமரின் மனைவி சோஃபி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பயங்கரவாதி ஜஸ்பாலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.மேலும் கனடா பிரதமர் ஜஸ்டினுடன் டெல்லியில் நடக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ளவும் ஜஸ்பாலுக்கு கனடா தூதரகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. பின்னர் அதை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜஸ்பால் அத்வல் சீக்கிய இயக்கத்தின் கடுமையான விமர்சகரான உஜ்ஜால் தோஸன்ஜ் மீது கொடூரமன தாக்குதல் நடத்தியது,ஆட்டோமொபைல் வழக்கு என பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment