சுதந்திர தினத்தை புறக்கணித்த கேப்பாபுலவு போராட்ட மக்கள் - Yarl Voice சுதந்திர தினத்தை புறக்கணித்த கேப்பாபுலவு போராட்ட மக்கள் - Yarl Voice

சுதந்திர தினத்தை புறக்கணித்த கேப்பாபுலவு போராட்ட மக்கள்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர நாளை கேப்பாபிலவில் காணிவிடுவிப்பு போராட்டத்தில் ரூடவ்டுபட்ட மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ரூடவ்டுபட்டனர்.

குறித்த போராட்டத்தை மேற்கொண்ட இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு மக்களின் போராட்டம் கவனயீர்ப்பு நடைபவனி என்பவற்றை நிறுத்தியுள்ளனர்.

நேற்று 339 ஆவது நாளாக தங்கள் வாழ்விடங்களை விடுவிக்ககேரி பேராட்டம் நடத்திவரும் கேப்பாபிலவு மக்கள் போரட்டத்தை தலைமைதாங்கி நடத்தும் ஆறுமுகம் வேலயுதபிள்ளை நேற்று வித்தியாசமான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு இலங்கையின் சுதந்திர தின நாளினை புறக்கணித்துள்ளார்.

போராட்ட கொட்டகைக்கு முன்பாக உயரத்தில் பரண் அமைத்து அதில் அமர்ந்தவாறு அனைவரையும் கவனயீர்க்கும் வண்ணம் கறுத்த உடையுடன் கையில் வேப்பிலையினை வைத்துக்கொண்டு நேற்று அதிகாலை ஆலய வழிபாட்டினை தொடர்ந்து சூரியவழிபாட்டினை மேற்கொண்டவாறு உணவுதவிர்ப்புடன் கவனரூடவ்ர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரது கவனரூடவ்ர்ப்பு தங்கள் வாழ் இடங்களான பூமித்தாயினை விடுவிக்ககோரி அண்டபிரபஞ்சத்தை நோக்கி எரியும் தீபத்துடன் நண்பகல் 1.30 மணிவரை உச்சி வெய்யிலில் வேண்டியவாறு இருந்துள்ளார்.

இந் நிலையில் போராட்ட மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கவனயீர்ப்பினை முடிவிக்கு கொண்டுவர ஆறுமுகம்பிள்ளையிடம் கோரியுள்ளார்கள் முடிவிற்கு கொண்டுவர அவரும் சம்மதித்துள்ளார.; இதனையடுத்து பரணில் இருந்து இறங்கிய அவர் அங்கு திரண்ட மக்களுடன் கோசங்களை எழுப்பியும் பதாதைகளையும் தாங்கியவாறு கவனயீர்ப்பை மேற்கொண்டார்கள்.

மக்களின் ஆர்ப்பாட்டத்தை கண்காணிப்பதற்காக காலை வேளையிலேயே பொhலீஸார் நிறுத்தப்பட்டுள்ளார்கள் அவர்கள் அவதானிப்புடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கையில் அனைவருமாக சேர்ந்து கறுத்த கொடியினையும் காணிவேண்டும் என்ற பதாதைகளை தாங்கியவாறு கேக்பாபிலவு நுளைவாயில் ஊடாக விடுவிக்கப்பட்ட ஆலயம் நோக்கி பேரணியாக நுளைவாயில் ஊடாக சென்றபோது 59ஆவது படைத்தலைமையகத்திற்கு முன்பாக சென்ற மக்களை முள்ளியவளை பொலிஸ் அதிகாரி வந்து மறித்துள்ளார்.

இந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் ஊடாக செல்லமுடியாது இது தேர்தல் காலம் இதற்கான அனுமதி உங்களிடம் இல்லை நீங்கள் சிறுவர்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் இதற்கு அங்கால் செல்லமுடியாது என்று தடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் அந்த இடத்தில் இருந்து தங்கள் காணிகள் தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார்கள் இல்லையேல் என்னை இந்த இடத்தில் சுட்டுக்கொன்று விடுங்கள் என்று ஆறுமுகம் வேலாயுதம் அவர்கள் பொலீஸாரைபார்த்து காலில் விழுந்தார்.

எங்கள் நிலத்தைத்தான் நாங்கள் கேட்கின்றோம் என்ற கோரிக்கையில் பொலீஸாரை எதிர்த்து மக்கள் கதைத்தவேளை முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களை கலைந்து செல்லுமாறு அறிவித்தார்.

இங்கு ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்களை ரூடவ்டுபடுத்தியுள்ளீர்கள்ரூபவ் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை.

இது தேர்தல் காலம் உங்களுக்கான அனுமதி உங்கள் கொட்டகையில்தான் என்பதை தெரிவித்துள்ளதை தொடர்ந்து கருத்து தெரிவித்த மக்கள் நாங்கள் எங்கள் கவனயீர்ப்பினை நிறைவு செய்வதற்காக ஆலயம் நோக்கி செல்கின்றோம் எங்களை விடுங்கள் நாங்கள் படைமுகாமிற்கு எதிராகவோ அல்லது படையினருக்கு எதிராகவோ ஆர்ப்பாட்டம் செய்யவில்லை எங்கள் ஆலயத்தில் இன்றைய கவனயீர்ப்பினை நிறைவு செய்யும் பிரார்த்தனையினை செய்யத்தான் செல்கின்றோம் என்றார்கள்.

நீங்கள் செல்வதாயின் கறுப்பு கொடிகளையும் பதாதைகளையும் போட்டுவிட்டு செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளதை தொடர்ந்து அதற்கு இணங்கிய மக்கள் கறுப்பு கொடியினையும் பதாதைகளையும் அருகில் போட்டுவிட்டு ஆலயம் நோக்கி சென்று அங்கு ஆலயத்தில் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை தனது சூரிய நமஸ்காரத்தினையம் அண்டபிரபஞ்ச வழிபாட்டினையும் நிறைவிற்கொண்டுவந்துள்ளார.

குறித்த சம்பவ இடத்திற்கு மேலதிகமாக பொலீஸார் வரவளைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பெண் பொலீஸ் உள்ளிட்ட பொலீஸார் பேருந்து போன்றன வரவளைக்கப்பட்டுள்ளதுடன் ஆலய வழிபாடு மேற்கொண்ட மக்கள் தங்கள்போராட்ட கொட்டகை திரும்பும் வரை பொலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post