கச்சத்தீவு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்!
இலங்கை-இந்திய கடல் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் நற்கருணை பெருவிழாத் திருப்பலி வழிபாடுகளுடன் திருவிழா இனிதே ஆரம்பமாகும்.
இதனை தொடர்ந்து நாளை யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க ஆண்டகை ஆகியோரினால் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
இம்முறை திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சதீவு திருவிழாவை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் படகுச் சேவையின்போது கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment